Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்க வீட்டில கரண்ட் இல்ல….. கொஞ்சம் வந்து பாருங்க….. புகார் அளிக்க வந்தவரை….. மின்வாரிய ஊழியர் செய்த சம்பவம்….!!!!

மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த நபரை மின்வாரிய ஊழியர் அடிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த பெண்மணி ஒருவர் இன்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட நேரம் மின்சாரம் வரவில்லை என்று புகார் அளித்துள்ளார். அப்போது பணி உதவி மின் பொறியாளர் இல்லாததால் பணியில் இருந்த வணிக விற்பனையாளர் குப்புராஜ் நான் வந்து சரி செய்து தருவதாக கூறிவிட்டு அலுவலகம் உள்ளே சென்று அமர்ந்து கொண்டார்.

இதனால் அந்த பெண்மணியுடன் வந்தவர்கள் குப்புராஜை தகாத வார்த்தையில் திட்ட அவர் ஆத்திரமடைந்து மின்மீட்டரை எடுத்து அவர்கள் மீது கோபத்துடன் வீசினார். இதை ஒருவர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது குறித்து மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது இது தொடர்பாக விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |