Categories
தேசிய செய்திகள்

எங்க வீட்டுக்கு வாங்க…. பெண் லீலையில் சிக்கிய முதியவர்…. ரூ.27 லட்சம் பறித்த தம்பதியினர்…. போலீஸ் அதிரடி…..!!!!!

கேரளா திருச்சூர், குன்னம்குளம் பகுதியில் வசித்து வரும் நிஷாத்தின் மனைவி ரஷிதா (28). இவர்கள் இருவரும் சமூகவலைதளத்தில் பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதன் வாயிலாக இருவருக்கும் பல பேரின் தொடர்பு கிடைத்தது. இவற்றில் பணம் படைத்த முதியவர்கள் யார் யார் என கண்டறிந்து அவர்களுடன் ரஷிதா தொடர்பு வைத்தார். அதன்படி மலப்புரம் பகுதியில் வசித்து வரும் 68 வயதான முதியவருடன் ரஷிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின் அந்த முதியவருடன் ரஷிதா நெருங்கி பழகியதோடு, அவரை தன் வீட்டுக்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் ஆசை வார்த்தை கூறினார்.

இதில் மயங்கிய முதியவர் சென்ற சில மாதங்களுக்கு முன் ரஷிதா வீட்டிற்கு சென்றார். அதன்பின் அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தனர். இதை ரஷிதாவின் கணவர் நிஷாத் செல்போனில் படம் பிடித்தார். பின் கணவன்-மனைவி இரண்டு பேரும் முதியவரை தொடர்புகொண்டு பேசினர். அதாவது “ரஷிதாவுடன் உல்லாசமாக இருக்கும் படம் உள்ளதாகவும், அதை சமூகவலைதளத்தில் பதிவிடாமல் இருக்க பணம் தரவேண்டும் எனவும் முதியவரை மிரட்டினர். இதனால் மிரண்டுபோன முதியவர் அவர்கள் வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பினார். ரூ.27 லட்சம் வரை முதியவரிடம் இருவரும் பணம் பறித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் அவர்களின் மிரட்டலால் முதியவர் மன உளச்சலுக்கு ஆளானார். இதனிடையில் முதியவரின் வங்கி கணக்கிலிருந்து லட்சக் கணக்கில் பணம் கைமாறிய தகவலை அவரது உறவினர்கள் அறிந்தனர். இதுகுறித்து அவர்கள் முதியவரிடம் கேட்டபோது, அவர் தனக்கு நேர்ந்த சம்பவத்தை கூறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் தலைமறைவாக இருந்த நிஷாத்-ரஷிதா இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் இது போன்று வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளார்களா..? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |