கேரளா மாநிலத்தில் கிணற்றிலிருந்து தண்ணீரை காணவில்லை என்று வீட்டில் உரிமையாளர் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த வங்கினிச்சேரி என்ற பகுதியை சேர்ந்த சதீசன் தனது வீட்டில் குடிநீர் தேவைக்காக கிணறு அமைத்துள்ளார். இந்த கிணற்றின் தண்ணீரை வீட்டின் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். கிணற்றில் உள்ள ஊற்றுகள் மூலமும், மழை நீர் மூலமும் கிணற்றில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் கிணற்றில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை அதில் அமைக்கப்பட்டுள்ள அளவு கருவி மூலம் சதிசன் பார்ப்பது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் காலையில் சதீசன் கண்ணீர் இருப்பதை பார்த்தார். அதில் 18 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. மேலும் ஊற்றிலிருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மறுநாள் காலையில் கிணற்றை பார்த்தபோது கிணற்று வறண்டு கிடந்தது. கிணற்றில் இருந்த 18 அடி தண்ணீரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சதீசன் கிணற்றை சுற்றி சுற்றி பார்த்தார். அடிப்பகுதியில் உடைப்பு ஏதாவது ஏற்பட்டுள்ளதா? என்று பார்த்தார் எதுவும் இல்லை.
எனவே அவர் பக்கத்து வீடுகளில் உள்ள கிணறுகளை பார்த்தார். தண்ணீரை திருடி விட்டார்களா? என்றும் பார்த்தார். அப்படி எதுவும் நடக்கவில்லை. இது தொடர்பாக அவர் மண்வளத்துறை மற்றும் புவியியல் பிரிவு அதிகாரம் புகார் கொடுத்தார். அதிகாரிகள் சதீசன் வீட்டுக்கு சென்று கிணற்றை பார்வையிட்டனர். ஒருநாள் இரவில் 18 அடி தண்ணீரும் மாயமாவதற்கு வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளன. இது எப்படி நடந்தது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.