புதுச்சேரியில் எய்ட்ஸ் பாதித்தவர்களின் நலத் திட்டங்களுக்காக ரூபாய் 1.57 கோடி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் மாநில எய்ட்ஸ் தடுப்பு உயர்மட்ட குழு கூட்டம் நேற்று அக்கார்டு ஓட்டலில் நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். துறை செயலர் உதயகுமார், இயக்குநர் ஸ்ரீராமுலு முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அதிகாரிகள், தகவல் தொடர்பு மற்றும் பயிற்சி ஆலோசகர்கள் நிதிராவத், உட்பல் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஹெச்ஐவி எய்ட்ஸ் நோயுடன் வாழ்பவர்களுக்கு பென்ஷன் தொகையை 500 ரூபாய் உயர்த்தி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், ரூ.1,025 மதிப்புள்ள சத்துணவு பொருட்கள் மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தில் ரேஷன் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சரசுக்கு ஒரு கோடியே 57 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.