ராணிப்பேட்டையில் கொரோனா தொற்றால் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று சில இடங்களில் குறைந்தும், சில இடங்களில் அதிகரிக்கும் வருகிறது. மேலும் கொரோனாவிற்க்கு தடுப்பூசி போடும் பணி பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 5-ஆம் தேதி 2-ஆக இருந்தது. இதையடுத்து ஆறாம் தேதி 4-ஆக உயர்ந்தது. அதன்பின் பத்தாம் தேதி மீண்டும் ஒன்றாக குறைந்தது. இதையடுத்து 11-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது.
நேற்று ஐந்தாக உயர்ந்துள்ளது. ஆற்காடு அடுத்த சாத்தூர் காந்தி நகரை சேர்ந்த 39 வயது ஆண், அரக்கோணம் கிருஷ்ணா பேட்டை பகுதியை சேர்ந்த 66 வயது ஆண், வாலாஜா பஜார் மற்றும் ராணிப்பேட்டை பெல் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள், வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்த 66 வயது பெண் உள்ளிட்ட 5 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.