Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை!! ஆபத்து என்னன்னு தெரிஞ்சிக்கோங்க….. சாப்பிட்ட பிறகு வருந்த வேண்டாம்…!!

இன்று பலரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நோய் நீரழிவு, உடல்பருமன் போன்றவற்றிற்கு முக்கியக் காரணமாக இருப்பது நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகள் தான். சமைப்பதற்கு நேரமின்றி நவீன உலகில் துரித உணவுகளையும் ஹோட்டல் உணவுகளையும் அதிகமாக சாப்பிட்டு வருகின்றோம். இதனால் வரும் ஆபத்தை பலரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் உணவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள் பற்றி எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில் நமது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து மெல்லமெல்ல உயிரை எடுக்கும் உணவுகள் பற்றி சில தகவல்கள்.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் என்ற பெயரில் ஆழமாக வறுக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பலரது விருப்ப தின்பண்டமாக இருக்கின்றது. இது உடலிலுள்ள பெருங்குடல், சிறுநீர்ப்பை, மலக்குடல் போன்றவற்றிற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனினும் இதனை சாப்பிடுவதை நிறுத்த முடியவில்லை என்றால் வீட்டில் தயாரித்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

சுத்திகரிக்கப்பட்ட உணவு

கேக், வெள்ளை ரொட்டி, குக்கீஸ், வெள்ளை பாஸ்தா, தானியத்தில் செய்யப்பட்ட காலை உணவு போன்றவற்றை வெளியிலிருந்து வாங்கும் போது அவை நாம் நினைப்பது போன்று ஆரோக்கியமானதாக இருக்க வாய்ப்பு இல்லை. அந்த உணவுகள் அதிகமாக செறிவூட்டப்பட்ட கோதுமை மாவில் தயார் செய்யப்படுவதாகும். அதில் உள்ள கார்போஹைட்ரேட் உங்கள் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். சுத்திகரிக்கப்பட்ட உணவு எளிதில் சர்க்கரையாக மாறும் தன்மையுடையது இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

பழச்சாறு

கடைகளில் நாம் வாங்கி அருந்தும் பழச்சாறுகளில் இனிப்பு சுவைக்காக பிரக்டோஸ் என்பதனை சேர்க்கிறார்கள். பிரக்டோஸ் சேர்த்த பழச்சாறுகளை நாம் தினமும் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும்.

சமையல் எண்ணெய் 

பழங்காலத்தில் செக்கில் ஆட்டிய எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவதால் அதில் இருக்கும் சத்துக்கள் அழியாமல் நமக்கு கிடைத்தது. அதனை தொடர்ந்து சூரியகாந்தி எண்ணெய், காய்கறி எண்ணெய்கள் என பலவற்றை நாம் உபயோகப்படுத்த தொடங்கினோம். அவற்றில் இருக்கும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு அத்தியாவசியமானது என்றாலும் அது அதிகமாக உடலில் சேர்வதால் கொழுப்பு அதிகரிக்கிறது.

துரித உணவு

முன்பே தயார் செய்து பதப்படுத்தப்பட்ட உணவில் ஊட்டச்சத்துக்கள் இருப்பதில்லை. கலோரிகள் அதிகம் நிறைந்த இந்த உணவுகளை சாப்பிடுவதனால் உடல் பருமன் அதிகரிக்கின்றது. மந்தமாக உடலை வைத்திருக்கும் இந்த உணவுகள் நாளடைவில் கொழுப்பை அதிகரிக்கச் செய்து ரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். இதனால் இதய நோய் வருவதற்கான ஆபத்து உள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |