இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். செல்போனில் தங்களுக்கு தேவைப்படும் கேம் ஆப்புகளோ அல்லது வேறு ஆப்புகளையோ கூகுள் பிளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். இந்நிலையில் கூகுள் பிளே ஸ்டோர்க்கு வெளியே இருக்கும் சேவைகள் அல்லது ஒரிஜினல் செயலி போல இருக்கும் போலி செயலிகள் மூலம் ஹேக்கர்கள் ஊடுருவது தெரியவந்துள்ளது.
அதன்படி Uplift(Health and wellness app), VLC media player, kaspersky Antivirus , Bookreader Pluto TV போன்ற செயலிகளை உருவாக்கி அதன் மூலம் யூசர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுகின்றனர். இதனால் ஒரிஜினல் வெர்சன்களை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.