நடிகர்கள் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்று சீமான் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை விமர்சித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். பரப்புரையில் எம்ஜிஆர் குறித்து பேசினால் அதிமுகவிற்கு தான் ஓட்டு விழும், கமல் இது தெரியாமல் இருக்கிறார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். அரசியலை தெரியாமல் பேசும் கமல் மக்களை கேவலமாக நினைக்கிறார் என்றும், இந்தத் தேர்தலில் ரஜினி மற்றும் கமலுக்கு கிடைக்கும் அடியை பார்த்து எந்த நடிகர்களும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு போஸ்டரில் மன்னிப்பு என்ற வார்த்தையை தவறாக ஒட்டியுள்ளனர்.