தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பிற மாவட்டங்களுக்கு செல்வதற்குக் கூட இ-பாஸ் கட்டாயம் எடுத்து தன செல்ல வேண்டும் என்ற நிலை வந்தது. இதனிடையே இ-பாஸ் பெறுவதில் பல்வேறு வகைகளில் முறைகேடு எழுந்ததாக புகார் எழுந்தது.
இது பல இடங்களில் அம்பலப்பட்ட நிலையில் முறைகேடாக இ-பாஸ் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், இ-பாஸ் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இ-பாஸ் பெற்று தருவதாக கூறும் இடைத்தரகர்கள் யாரையும் மக்கள் நம்பி ஏமாற வேண்டாம். சென்னை மாநகராட்சியில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.