கொரோனாவால் ஏற்கனவே பாதிப்படைந்து குணமடைந்தவர்களை புதிய கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் மற்றும் தென்ஆப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. எனவே பிரிட்டனில் மூன்றாம் கட்ட ஊரடங்கு முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோன்று விதிமுறைகளை ஐரோப்பிய நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இதனை கட்டுப்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் தற்போது பரவிவரும் புதிய கொரோனா வைரஸை தடுப்பு மருந்துகளாலும் தடுக்க முடியாத நிலை ஏற்படலாம் என்ற ஆய்வு முடிவு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது நடத்தப்பட்ட புதிய ஆய்வில் உருமாறிய புதிய கொரோனா வைரஸானது, ஏற்கனவே கொரோனா பாதித்து குணமானவர்களை எளிதாக பரவக்கூடிய அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.