சுவிட்சர்லாந்தில் பருவநிலை மாற்றத்தால் பேராபத்து ஏற்பட போவதாக அரசு ஆய்வு எச்சரிக்கை செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் பருவநிலை மாற்றத்தால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தால் குளிர்காலத்தில் ஆறுகளில் 30% தண்ணீர் அதிகரித்து வெள்ளம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோடைகாலத்தில் 40% தண்ணீர் குறைவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் சுற்றுச்சூழல் அலுவலகம் எச்சரிக்கை செய்துள்ளது. அரசின் புதுப்பிக்கப்பட்ட கார்பன்-டை-ஆக்சைடு சட்டத்தின்படி பருவநிலை மாற்றத்திற்கான பாதுகாப்பு நடைமுறையை எடுக்காவிட்டால் பெரிய ஆபத்துகள் ஏற்படும் என்று ஆய்வு எச்சரித்துள்ளது.
மேலும் அந்த அரசு மேற்கொண்ட ஆய்வில் நீரோடை மற்றும் ஆறுகளில் கோடை காலத்தின் போது 5.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் ,குளிர்காலத்தில் அதிக அளவில் மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அந்த ஆய்வில் கோடை காலத்தில் அதிகமாக வறண்டு இருப்பதால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். மேலும் குளிர்காலத்தில் அதிகமாக வெள்ளம் மற்றும் மழைப்பொழிவால் நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரழிவுகள் நேரிட வாய்ப்பு உள்ளதாக கூறி அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.