Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை..!! டூத் பேஸ்ட்டில் ஃப்ளோரைடு… நல்லதா…? கெட்டதா…? உயிர் போகும் அபாயம்…!!

டூத் பேஸ்ட் பற்றி தெளிவாக கூற வேண்டிய அவசியம் இல்லை. தினமும் காலையில் எழுந்தவுடன் டூத் பேஸ்ட்  வைத்து நாம் பல் துலக்குகிறோம். இந்த டூத் பேஸ்ட் நமது உடலுக்கு எப்படி தீங்கு விளைவிக்கின்றது என்ற கேள்விக்கு  பதிலாக இந்த தொகுப்பு

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போன்று தான் இந்த டூத்  பேஸ்ட்டும். விளம்பரத்தில் நாம் பார்ப்பது போன்று பிரஷ் முழுவதும் பேஸ்டை வைக்க கூடாது அவ்வாறு வைத்தால் மிகப்பெரிய நோய் நம்மை தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சிறிதளவு டூத் பேஸ்ட் கொண்டு நமது பற்களை சுத்தம் செய்தாலே போதுமானது அனைத்து டூத் பேஸ்டில் ஃப்ளோரைடு என்று கூறப்படும் ரசாயனம் இருக்கிறது. இது நமது எலும்புக்கும் பல்லுக்கும் மிக முக்கியமாக தேவைப்படும் ஒரு பொருளாகும்.

ப்ளோரைடு கலந்த பற்பசைகளை பயன்படுத்துமாறு பல் மருத்துவக் கழகங்களும் மருத்துவர்களும் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள். அதோடு ப்ளோரைடு கலந்த டூத் பேஸ்ட் உபயோகிப்பவர்களுக்கு பல் தொடர்பான பிரச்சனைகள் வருவது இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரம் அளவுக்கு அதிகமான ப்ளோரைடு பயன்படுத்துவதால் அது பற்களுக்கு மட்டுமல்லாது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்

  • இரண்டு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மருத்துவர்கள் அறிவுறுத்தினால் மட்டுமே டூத் பேஸ்ட்களை உபயோகிக்க வேண்டும்.
  • அதிகமாக டூத் பேஸ்ட் எடுத்து பல் துலக்குவதால் ஃப்ளோரைடு அதிகமாக உடலுக்குள் சென்று தீங்கு விளைவிக்கக் கூடும்.
  • ஒரு பிராண்ட் டூத்பேஸ்ட்களையே எப்போதும் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு பிராண்ட் களிலும் வெவ்வேறு ஃப்ளோரைடு பயன்படுத்தப்பட்டிருக்கும். இதனால் நமது உடல் அவற்றை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதில் திணறி விடும் இதனால் உடல்நல கோளாறுகள் ஏற்படும்.
  • வாரத்தில் இரண்டு நாட்களாவது டூத்பேஸ்ட்களுக்கு விடுமுறை விட்டு கைகளால் பல்பொடி கொண்டு பல் துலக்குவது நல்லது.

Categories

Tech |