நாம் சமயலறையில் பயன்படுத்தும் நான்ஸ்டிக் குக்கரால் ஏற்படும் ஆபத்து பற்றிய தொகுப்பு
தற்போதைய காலகட்டத்தில் சமையலறையில் முக்கிய அங்கமாக இருப்பது நான்ஸ்டிக் குக்கர். இன்று பெரும்பாலான சமையல் பாத்திரங்களில் டெப்லான் எனும் மேற்பூச்சு பூசப்பட்டு நான்ஸ்டிக் பாத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பாத்திரங்கள் அதிக அளவு வெப்பம் அடையாத வரை ஆபத்து இல்லை.
ஆனால் குறிப்பிட்ட அளவை மீறி வெப்பமாக மாறிவிட்டால் பாத்திரத்தின் மேல் பூசப்பட்டுள்ள டெப்லான் கோட்டிங் கண்ணுக்குத் தெரியாத மூலக்கூறு மட்டத்தில் மோசமடைய தொடங்கி அதிலிருந்து நச்சுப்புகை உற்பத்தியாகிறது. இது உடல்நல பாதிப்புகள் ஏற்படுத்துகிறது. அதோடு நான் ஸ்டிக் கோட்டிங் பிரியும் நிலையில் இருக்கும் பாத்திரங்களையும் உபயோகப்படுத்தக் கூடாது ஏனெனில் அவற்றில் நாம் சமைப்பதால் ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.