புயல் சின்னம் காரணமாக தமிழக்தில் வரும் 24, 25-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்ட பகுதிகளில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25 ஆம் தேதி புயலாக மாறி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புஉள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை- காரைக்கால் அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் மண்டலமாக மாறும் எனவே புயல் சின்னம் காரணமாக 24, 25-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.