பொதுவாக எந்த உணவை சாப்பிட்டாலும் அதனுடன் வேறு ஒரு உணவை எடுக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் . அவ்வகையில் பால், இறைச்சி, மீன் போன்றவற்றை சாப்பிடும் போது அதனுடன் சேர்க்க கூடாதது எது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளவேண்டும், குளிர்ந்த தன்மை கொண்ட உணவுடன் வெப்பத் தன்மை கொண்ட உணவை சேர்ப்பதனால் வயிறு பாதிப்படையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்
தற்போது பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் எது என்பது பற்றிய தொகுப்பு
பாலுடன் வாழைப்பழம்
மில்க் ஷேக் என்ற பெயரில் வாழைப்பழம் மற்றும் பால் சேர்த்து சாப்பிடுவது வழக்கம். அதோடு திருமணத்தின் போது மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுப்பார்கள். ஆனால் இது மிகவும் தவறான ஒன்று. பால் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடுவதால் வயிறு எரிச்சல் அடையும். பாலிலுள்ள குளிர்ச்சித் தன்மையும் வாழைப்பழத்தில் இருக்கும் வெப்பத் தன்மையும் ஒன்றாக சேர்ந்தால் செரிமானம் ஆகும்போது நஞ்சாக மாறிவிடும்.
பாலுடன் இறைச்சி
புரோட்டின் சத்து இறைச்சியில் அதிகம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இறைச்சியை சாப்பிட்டால் செரிமானம் ஆவதற்கு பல மணி நேரங்கள் ஆகும் அவ்வாறிருக்க இறைச்சியுடன் சேர்த்து பால் சாப்பிடுவதால் செரிமான மண்டலத்தில் பல வேதி வினைகள் ஏற்படும். அதோடு ஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.
பாலுடன் ஸ்டாபெர்ரி
ஸ்டாபெர்ரி சிறியபழமாக காட்சியளித்தாலும் அதிலிருக்கும் நன்மைகள் பல. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ளடங்கியுள்ளது. இதனுடன் பால் சேர்த்து சாப்பிடுவதனால் ஜீரண பிரச்சனைகள் ஏற்படுவதோடு இருமல், சளி போன்றவையும் ஏற்படக்கூடும்.
பாலுடன் எலுமிச்சை ஜூஸ்
ஆபத்தை அறியாமல் சிலர் எலுமிச்சை ஜூஸ் குடித்துவிட்டு பால் குடிப்பார்கள். இதனால் எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் ஆசிட் பாலுடன் சேர்ந்து குடலில் அலர்ஜி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.