Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை ..!!பிரான்சில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரிப்பு ..!பீதியில் மக்கள் .!!

பிரான்சில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 38,501 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸில் நேற்று வெளியிடப்பட்ட பொதுசுகாதார ஆணையத்தின் புள்ளி விவரங்களில் தற்போது நாட்டில் அதிகமாக கொரோனா தொற்று பரவி வருவதாக கூறப்படுகிறது.முன்னதாக கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தொற்றினால் 41,622பேர் பாதிக்கப்பட்டதால் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இரண்டாவது ஊரடங்கை  அறிவித்தார்.ஆனால்  கடந்த சில வாரங்களாக தினசரி தொற்று எண்ணிக்கை 20,000 முதல் 25,000 வரைஉள்ளதாகவும் பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 10-ம் தேதிகளில் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து உள்ளதாகவும்  கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,501 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 91,437 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால் நாட்டின் பிரதமரான ஜென் காஸ்டெக்ஸ் கொரோனா தொற்றின்  மூன்றாவது அலை பரவிக் கொண்டு இருப்பதாக கூறியுள்ளார்.

Categories

Tech |