பிரிட்டன் கடற்கரையில் முள்ளங்கி போன்று காணப்படும் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த வேர் தென்பட்டுள்ளதால் மக்களுக்கு அதனை குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
வடமேற்கு இங்கிலாந்தின் கடற்கரையில் புயலின் காரணமாக முள்ளங்கி போன்று இருக்கக்கூடிய ஹெம்லோக் வாட்டர் ட்ராப்ஒர்ட் ரூட்ஸ் என்று அழைக்கப்படும் அதிக நச்சுத் தன்மை கொண்ட வேர்கள் தென்பட்டுள்ளன.இது பார்ப்பதற்கு தான் முள்ளங்கி போன்று இருக்கும் ஆனால் இது அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இதனைக்கண்ட கடலோர காவல் படையினர் மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர். இந்த தாவரமானது ஆறுகள், நீரோடைகள் மற்றும் ஏரிகள் போன்ற பகுதிகளில் வளரக்கூடியது .
இந்த நச்சு தாவரம் ஆழமற்ற நீரில் சுமார் ஒரு மீட்டர் உயரத்திற்கு வளரும் என்று கூறப்படுகிறது. இந்த தாவரம் வலியை தூண்டும் தன்மை கொண்டது. மேலும் இதனால் சில நேரங்களில் மரணம் கூட ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இது ஒரு சிறிய துண்டு சாப்பிட்டால் கூட ஆபத்து என்று கூறப்படுகிறது .மேலும் இந்த தாவரங்களினால் மனிதர்களுக்கு அபாயம் ஏற்படும் என்பதால் மக்களை மிகவும் கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.