பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனில் கொரோனா தொற்றின் மூன்று அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளார்.
கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஐரோப்பா ஒன்றியம் பிரிட்டனுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் பிரிட்டன் கொரோனாவால் மேலும் பாதிக்கப்படும் என்றும் தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை செய்துள்ளார்.
ஐரோப்பா ஆணையத்தின் தலைவர் வோன் டெர் லேன் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படும் என்று அறிவித்ததால் Brusselsக்கும் பிரிட்டனுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.