Categories
தேசிய செய்திகள்

எச்சரிக்கை ..!!மூன்று மரபணு மாற்றமடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ..!!எந்த நாட்டில் பரவி வருகிறது தெரியுமா ?

இந்தியாவில் மூன்று மரபணு மாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் கண்டறியபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேர்  புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இறப்பு எண்ணிக்கை நேற்று ஒரு நாள் மட்டும் 2,023 ஆக பதிவாகி உள்ளதாகவும்  கூறப்படுகிறது. இரண்டாவது அலைக்கு மத்தியில் இரட்டை மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸால் தொற்று பல மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவை  மேலும் அச்சுறுத்தும் விதமாக மூன்று மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

மூன்று மரபணு மாற்றம் என்பது  மூன்று வெவ்வேறு வகை கொரோனா தொற்று ஒன்று சேர்ந்து உருவாகிய புதிய வகை வைரஸ் என்றும் இந்த வைரஸ் எந்த அளவிற்கு வேகமாக பரவுகிறதோ அதற்கு ஏற்ப புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மூன்று மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மகாராஷ்டிரா ,டெல்லி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பரவி வருவதாக  கூறப்படுகிறது.

Categories

Tech |