Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எச்சரித்தும் கேட்கல… “குண்டர் சட்டத்தில் ரவுடி கைது”…. போலீசார் அதிரடி..!!

 நாகர்கோவில்  அருகே  ரவுடி ஒருவர்  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் .

கன்னியாகுமரி  மாவட்டம்  நாகர்கோவில்  திற்பரப்பு  அருகே  நக்கீரன்விளை பகுதியை  சேர்ந்தவர் ஜெகன். இவருக்கு  வயது  35 . இவர்  மீது   குலசேகரம்  காவல்  நிலையத்தில் அடிதடி ,திருட்டு வழக்குகள்  இருக்கிறது .  மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுட  கூடாது  என்று போலீசார் எச்சரிக்கை செய்தும், அதையும் மீறி ஜெகன் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் அவரை  குண்டர் சட்டத்தின்  கீழ்  கைது  செய்து  சிறையில்  அடைக்க வேண்டும்  என்று  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலெக்டர் அரவிந்துக்கு  பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து கலெக்டரின் உத்தரவின்படி, நேற்று  முன்தினம்  போலீசார்  குண்டர் சட்டத்தின் கீழ்  அவரை  கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |