Categories
அரசியல் மாநில செய்திகள்

எச்.ராஜா பரபரப்பு பேச்சு… இது என்னடா புது கொடுமை…!!!

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் என்பது காங்கிரஸ் ஆட்சியை விட குறைவுதான் என்ற எச்.ராஜா கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் என்பது காங்கிரஸ் ஆட்சியை விட குறைவுதான் என்று எச்.ராஜா கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பொருள்களின் விலையேற்றம் கூட காங்கிரஸ் ஆட்சியை விட குறைவுதான். காங்கிரஸ் ஆட்சியில் 3.9 சதவீதமாக இருந்த விலை ஏற்றம் பாஜக ஆட்சியில் 2.6 சதவீதமாக உள்ளது என்றார். ஆனால் தற்போது பெட்ரோல் விலை 90 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதால், நடுத்தர குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |