Categories
சினிமா தமிழ் சினிமா

“எஞ்ஜாய் எஞ்சாமி பாடல் விவகாரம்”…. சந்தோஷ் நாராயணனை தொடர்ந்து பாடகி தீயும் விளக்கம்….!!!!!

எஞ்ஜாய் எஞ்சாமி பாடல் விவகாரத்தில் சந்தோஷ் நாராயணனை தொடர்ந்து பாடகி தீயும் விளக்கம் அளித்துள்ளார்.

சென்ற வருடம் வெளியான என்ஜாய் எஞ்சாமி பாடல் உலக அளவில் பிரபலமாகி யூடியூபில் மில்லியன் வியூஸுக்களை பெற்று சாதனை படைத்தது. இந்த பாடலை தெருக்குறல் அறிவு மற்றும் தீ உள்ளிட்டோர் பாடி பிரபலமானார்கள். சென்ற சில மாதங்களுக்கு முன்பு ரோலிங் ஸ்டோன் இந்தியா அட்டைப்படத்தில் அறிவு படம் இடம் பெறாமல் தீயின் படம் மற்றும் இடம் பெற்றதால் சர்ச்சையை ஏற்படுத்தியது.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி நடைபெற்ற பொழுது உலகளவில் ஹிட்டான என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடகி தீயும் கிடாகுழி மாரியம்மாளும் பாடினார்கள். இந்த பாடலின் ஒரிஜினல் வெர்சனை தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடினார்கள். ஆனால் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் தெருக்குரல் அறிவு பங்கேற்கவில்லை. இதனால் அவர் ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்வி எழுந்த,து.

இதைத்தொடர்ந்து  என்ஜாய் என்ஜாமி பாடல் விவகாரத்தில் தான் புறக்கணிக்கப்பட்டது பற்றி உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் தெருக்குறல் அறிவு. அதில் அவர் கூறியுள்ளதாவது, என்ஜாய் எஞ்சாமி பாடலை நான் இசையமைத்தேன், எழுதினேன், பாடினேன், மற்றும் நடித்தேன். இதை எழுத யாரும் எனக்கு ஒரு ட்யூனையோ மெட்டையோ அல்லது ஒரு வார்த்தையோ கொடுக்கவில்லை. இப்பொழுது இந்த பாடல் இருக்கும் அனைத்திற்கும் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தூக்கம் இல்லாமல் மன அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் கழித்திருக்கின்றேன்.

இது ஒரு சிறந்த டீம் ஒர்க் என்பது சந்தேகம் இல்லை. அது அனைவரையும் ஒன்றாக அழைக்கிறது என்பது சந்தேகம் இல்லை. ஆனால் அது வள்ளியம்மாளின் வரலாறோ என் முன்னோர்களின் வரலாறோ இல்லை என்று அர்த்தம் இல்லை. என்னுடைய ஒவ்வொரு பாடலும் ஒடுக்குமுறையின் தழும்புகள் இருக்கும். இந்த பாடலில் இருந்ததைப் போலவே இந்த நாட்டில் பத்தாயிரம் நாட்டுப்புற பாடல்கள் இருக்கின்றது.

முன்னோர்களின் மூச்சு, அவர்களின் வலி, அவர்களின் வாழ்க்கை ,அன்பு ,அவர்களின் எதிர்ப்பு, அவர்களின் இருப்பு பற்றிய அனைத்தையும் சுமந்து செல்லும் பாடல்கள் அழகான பாடல்களாக உங்களிடம் பேசிக் கொண்டிருக்கின்றது. நீங்கள் உறங்கும் பொழுது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒரு போதும் அது முடியாது. ஜெய் பீம். இறுதியில் உண்மை எப்போதும் வெல்லும் என உருக்கமாக பதிவிட்டார்.இதைத்தொடர்ந்து இது பற்றி விளக்கம் அளித்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளதாவது, தான்தான் எஞ்ஜாய் எஞ்சாமி பாடலின் தயாரிப்பாளர், பாடலுக்கு இசையமைத்தது தான் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவரை தொடர்ந்து பாடகி தீயும் நீண்ட விளக்கம் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எஞ்ஜாய் எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கி இருக்கின்றேன். ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்கள் இருவர் பற்றியும் குறிப்பாக அறிவு பற்றி பெருமையுடன் கூறி இருக்கின்றேன். இருவரின் முக்கியத்துவத்தையும் எங்கேயும் குறைத்து மதிப்பிட்டதில்லை. ஒவ்வொரு வாய்ப்பின் போது மேடையில் இருவரையும் முன்னிலைப்படுத்தி பேசிய வருகின்றேன்.

பாடலுக்கான அர்த்தங்களை பாடல் வெளியான பின் அறிவின் ஒவ்வொரு இன்டர்வியூ மூலமாக நான் தெரிந்து கொண்டேன். அறிவு சொன்னது மிகவும் முக்கியமானது, மட்டுமல்ல முதன்மையானது என நம்பி அறிவின் குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பினேன். சென்ற வருடம் ட்ரோலிங் ஸ்டோன் இந்தியா இதழின் அட்டை படத்தில் நானும் ஷானும் இடம் பெற்றிருந்தோம். எங்கள் இணைப்பில் அடுத்து வரவுள்ள ஆல்பத்துக்கான அட்டை படமே அது. மற்றபடி அது எஞ்ஜாய் எஞ்சாமி பாடலுக்கானதோ அல்லது நீயே ஒலி பாடலுக்கானதோ அல்ல. அந்த அட்டைப்படத்திலும் அந்த பாடலின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

அறிவு, சந்தோஷ நாராயணன், மஜ்ஜா கலைஞர் பற்றிய கட்டுரைகளை ட்ரோலிங் ஸ்டோன் வெளியிட இருக்கின்றது என்பது எனக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களின் அட்டைப்படம் வெளியாகும் முன்பு ட்ரோலிங் ஸ்டோன் இதழ் ஒரு ட்விட்டில் அறிவித்தது. அந்த அறிவிப்பை கண்டு நான் சந்தோஷப்பட்டேன். செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் நானும் அறிவும் பங்கேற்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அணுகினார்கள். ஆனால் அந்த நேரத்தில் அறிவு அமெரிக்காவிலிருந்ததால் அவரால் பங்கேற்க முடியவில்லை. என்ஜாய் எஞ்சாமி பாடலை உருவாக்கியதற்காக சந்தோஷ் நாராயணன், அறிவு, மஜ்ஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவின் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். உண்மை எப்போதும் வெல்லும் என கூறியுள்ளார்.

 

Categories

Tech |