தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா. ரஞ்சித் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்களைத் தொடர்ந்து பா. ரஞ்சித் தற்போது நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த புதன்கிழமை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பயில்வான் ரங்கநாதன் சில கேள்விகளை கேட்டார். அதற்கு துஷாரா விஜயன் பதிலளித்துள்ளார்.
அதாவது பயில்வான் ரங்கநாதன் படத்தில் தன்பால் ஈர்ப்பு பற்றி வைத்துள்ளீர்களே இதனால் புது கலாச்சார சீர்கேடை உருவாக்கப் போகிறீர்களா என்று கேட்கிறார். அதற்கு நான் கலாச்சார சீரழிவாக அதை பார்க்க வில்லை என்று துஷாரா விஜயன் கூறியுள்ளார். அதன்பின் அர்ஜுன் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களுக்கான கேள்விகளுக்கு பதில் இல்லை என்று பயில்வான் கேட்டார். நாங்கள் எங்கள் கருத்தை தான் படத்தில் கூறி இருக்கோமே தவிர படத்தில் இருப்பதை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை என்றார். மேலும் பயில்வானின் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு நடிகையின் அதிரடி பதில்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.