அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கட்சி நிர்வாகிகள் பெரும்பாலோர் இபிஎஸ் பக்கமே இருப்பதால் அனேகமாக அவர்தான் கட்சியின் ஒற்றைத் தலைமையாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இன்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்புாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார். இந்நிலையில் இபிஎஸ்ஸுக்கு பூங்கொத்து கொடுத்த மாஃபா பாண்டியராஜன், அப்படியே குனிந்து அவரது காலை தொண்டு வணங்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Categories