Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியின் செம முயற்சி…! 1 இல்ல, 2இல்ல 3மடங்கு உயர்வு… கொண்டாடப்படும் அதிமுக ஆட்சி …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், 2006-ல் தமிழகத்தில் அனைத்து ப்ரொபஷனல் காலேஜுக்கும் நுழைவு தேர்வை ஸ்கிரப் பண்ணினதுக்கு அப்புறம், 2007 இலிருந்து 2017 வரை…. நீட் தேர்வு இங்கு அமல்படுத்துவது வரை ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளி மாணவர்கள் 30 லிருந்து 40 பேருக்கு தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து இருக்கிறது.

1 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்து இருக்கிறார்கள். ஆனால் இதற்கு முன்பாக தமிழகத்தை ஆட்சி செய்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு, அப்போதைய முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடுத்த ஒரு முக்கிய முயற்சியின் காரணமாக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை  அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுத்ததன் காரணமாக, இப்ப இருக்கிற கூடுதல் சீட், புதிதாக  17 மருத்துவ கல்லூரிகள் தமிழ்நாட்டிற்கு வருது. இதனால் கிட்டத்தட்ட மூன்று மடங்கு மருத்துவ இடங்கள் தமிழகத்திற்கு அதிகமாக கிடைக்கிறது.

12 வருடங்களாக தமிழகத்தில் பாட திட்டங்கள் மாற்றியமைக்கப் படாமல் இருந்ததால், நாம் எல்லோரும் மாணவர்கள் படிக்க முடியல, மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள், பழியை தூக்கிப் மாணவர்கள் மேலே போடுகிறோம். ஆனால் 12 வருஷமாக பாட திட்டங்களை மாற்றவில்லை, இப்படி பேசுவது நம் மாணவர்களுடைய தன்னம்பிக்கையை குலைக்கின்ற விதத்தில் இருக்கிறது.

இன்றைக்கு தமிழகத்தினுடைய  மாணவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக நல்ல முறையில் நீட் தேர்வு எழுதிய வருடம் தேசிய சராசரியை விட அதிகமாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆக தமிழக மாணவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள், அவர்களை குழப்பாதீர்கள். இந்த காரணங்களால் நீட் தேர்வினை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என்பதை வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |