Categories
மாநில செய்திகள்

எடப்பாடியில் இபிஎஸ்… போடியில் ஓபிஎஸ்… அதிமுகவில் யாருக்கு எந்த தொகுதி…?

வரும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டியிடுகிறார்.

அதிமுக விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் விருப்பமனு தாக்கல் செய்தனர்.

அதன்படி எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி, போடிநாயக்கனூரில் ஒ.பன்னீர்ச்செலவம், திண்டுக்கலில் சீனிவாசன், கோபியில் – செங்கோட்டையன், குமாரபாளையத்தில் தங்கமணி, தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்கள் உள்பட பெரும்பாலோனர் தங்களுடைய சிட்டிங் தொகுதியிலேயே போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |