விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிங்கராஜ் என்பவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டராக உள்ளார். இந்நிலையில் இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை அவதூறாக பேசியதாக கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.
உடனே இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரை கீழே இறக்கி வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் செல்போன் டவர் மீது ஏறி எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ய கூறியதாக தெரியவந்தது. அத்துடன் எடப்பாடி பழனிசாமியை கைது செய்யாமல் நன் காவல் நிலையம் வரமாட்டேன் என்றும் அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.