சென்னை தண்டையார் பேட்டை மண்டல அலுவலகத்தில் வட கிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட நீர்நிலைப் பகுதிகளை சேர்ந்த 10ஆயிரம் குடும்பங்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சியை இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி போன்றோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசியதாவது, சென்ற 2016ம் வருடம் தேர்தல் பரப்புரையில் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆயிரம் கோடி செலவு செய்து மழைநீர் வடிகால் பணிகள் முடித்துவிடப்பட்டது என்றும் இனிமேல் சென்னையில் மழைநீர் தேங்காது என்றும் பரப்புரை மேற்கொண்டார்.
அவர் இப்போது மழைநீர் தேங்கி இருப்பதை விமர்சனம் செய்வது நியாயமா..? என கேள்வி எழுப்பினார். அத்துடன் 2016-ல் 33% மழை பெய்ததற்கே சென்னை மழை வெள்ளத்தில் தவித்தது. தற்போது தி.மு.க ஆட்சியில் 46% மழை பெய்த 24 மணி நேரத்தில் அனைத்து மழைநீர் தேங்கும் இடத்திலும் சீரமைக்கப்பட்டது என தெரிவித்தார்.