Categories
மாநில செய்திகள்

எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு…. கலவரத்தை தூண்டுவதாக டிடிவி மீது புகார்….!!!!

ஜெயலலிதா நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கார் மீது யாரோ ஒருவர் செருப்பை வீசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதாவின் 5ஆவது நினைவு நாளை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர் அவர்கள் திரும்பிச் செல்லும்போது இருவரது கார்களையும் அமமுக தொண்டர்கள் வழிமறித்து முழக்கங்கள் எழுப்பினர்.

பின்னர் ஒருவழியாக அவர்களின் கார் கூட்டத்தை கடந்து மெதுவாகச் சென்றது. அப்போது கூட்டத்திலிருந்து யாரோ ஒருவர், எடப்பாடி சென்ற கார் மீது செருப்பை தூக்கி வீசினார். ஆனால் கார் நிற்காமல் சென்று விட்டது. ஜெயலலிதா நினைவிடத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக டிடிவி தினகரன் மீது, அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இதனால் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர், அமமுக தொண்டர்கள் , சசிகலா ஆதரவாளர்கள் என 3 பேரும் குவிந்தனர்.

அப்போது அவர்களுக்குள் ஒரு மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது. அப்போது அங்கு வந்த எடப்பாடிபழனிசாமி வாகனத்தை சிலர் வழிமறித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து டிடிவி தினகரன் கலவரத்தைத் தூண்டக்கூடிய வகையில் தனது கட்சி தொண்டர்களை தூண்டிவிட்டு எடப்பாடி பழனிச்சாமி கார் மீது செருப்பு வீச்சு செய்தார் என எம்ஜிஆர் மன்றம் சார்பில் அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் டிடிவி தினகரன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |