சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மேச்சேரி, ராசிபுரம், எடப்பாடி ஆகிய மூன்று கூட்டு குடிநீர் திட்டத்திற்கு மின்சாரம் வழங்கும் நேரம் 14ல் இருந்து 8 மணி நேரமாக குறைக்கப்பட்டிருப்பதாக கூறினார். இதை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும், என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ஒரு பிரச்சினையை அவையில் சுட்டிக்காட்டியிருப்பதாக கூறினார். அதில் உண்மை இருக்கும் பட்சத்தில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஏற்கனவே இருந்த சூழ்நிலை உருவாக்கித் தரப்படும், என அவர் பதிலளித்தார்.