செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கோவை செல்வராஜ், 11ஆம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது, எல்லோருக்கும் அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பிதழில் பொதுக்குழுவுக்கு யாரும் கையெழுத்திடவில்லை; எதுவுமே இல்லை. அது உண்மையாகவே கட்சி கடிதம் தானா அல்லது போர்ஜரி கடிதமா என்று தெரியவில்லை.
யாராவது கையெழுத்திட்டு அனுப்பி இருந்தால் அதைத்தான் நம்ப முடியுமே ஒழிய, இந்த கடிதம் யாரென்று தெரியவில்லை. யார் எப்படி கலந்து கொள்வது என்றும் தெரியவில்லை.அதிலேயே இரண்டு விதமாக போட்டு இருக்கிறார்கள். கொரோனா ஏதாவது அதிகமானால் நாள் வீட்டிலேயே இருந்து…. கட்சி அலுவலகத்தில் இருந்து நாம் காணொளி மூலமாக பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அதனால் அப்படியும் நடக்கலாம்; இப்படி நடக்கலாம் என்று அனுப்பி இருக்கிறார்கள். அதனால் அது எந்த கடிதம் ? யார் அனுப்பியது என்று தெரியவில்லை ? அந்த நிகழ்ச்சி என்பது துதி பாடுகின்ற நிகழ்ச்சிக்காக ஏற்பாடு என்று நினைக்கிறேன்; அதனால் அந்த நிகழ்ச்சிக்கு நான் செல்ல மாட்டேன்.
எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்கு தலைவர் கிடையாது; கட்சியினுடைய தலைவர் அண்ணன் ஓ பன்னீர்செல்வம். அதனால் இவர் முறையாக இரட்டை இலை சின்னம் கடிதம்….. பிரச்சனைகள் ஆயிரம் இருந்தாலும் இரட்டை இலை சின்னம் கொடுப்பதற்காக கடிதம் எடுக்க வேண்டும். ஏ ஃபார்ம், பி பார்ம் அனுப்பி வைக்க சொல்லி தலைமைக் கழகத்திற்கு கேட்டபோது, தலைமை கழகத்தில் அனுப்பவில்லை. இவர் கொடுத்த கடிதத்தையும் அவர் பார்க்கவில்லை.
இரண்டாவதாக ஒரு கடிதம் அனுப்புகிறார்; அதனால் அவர்கள் எல்லாம் போடுவது டிராமா. அவர்களுக்கு அதிமுகவைப் பற்றியும் கவலை இல்லை. கட்சி சின்னம் கொடுத்து தான் வேட்பாளர்கள் நிற்க வேண்டும் என்பதும் கவலை இல்லை. அவர்களுக்கு ஒரே எண்ணம்…. சாதாரண நபராக இருந்து சசிகலா அம்மா மூலம் அவர் முதலமைச்சராக வந்தார்.
பிறகு அவரையும் தூக்கி எறிந்து விட்டார். அண்ணன் ஓ.பன்னீர் செல்வம் நான்கரை வருஷம் இந்த ஆட்சி நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தார். அவரையும் தூக்கி எறிந்துவிட்டார். இப்போது வந்து கட்சியினுடைய பொதுச் செயலாளராக வர நினைக்கின்றார் என விமர்சித்தார்.