Categories
மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் செய்த மாற்றம்…. அப்படி என்ன செய்தார் தெரியுமா?…. இனி இப்படி தான்…..!!!

அதிமுக ஒன்றிய தலைமை விவகாரம் தலை தூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. இதனிடையில் பல்வேறு சர்ச்சைகளோடு அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படாத நிலையில் ஒருங்கிணைப்பாளர்களின் பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் ஓபிஎஸ் தன்னை ஒருங்கிணைப்பாளர் என்றே பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கான படிவத்தில் கையெழுத்திடுவது குறித்து அறிமுகம் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி புதன்கிழமை ஒரு கடிதம் எழுதினார். அதற்கு நேற்று பதில் கடிதம் அனுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, பொதுக்குழுவில் சட்ட திட்டங்கள் அங்கீகரிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்றும் உங்கள் கடிதம் செல்லாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டர் பக்கத்தில் சுய விவர குறிப்பில் “அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்” என்ற பொறுப்பை தலைமைச் செயலாளர் என மாற்றியுள்ளார். அதிமுகவில் இனை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்று கூறிவந்தபடியே தனது பொறுப்பை மாற்றிக் கொண்டு உள்ளார்.

Categories

Tech |