தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இவர் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் கார் மூலம் நேற்று முன்தினம் பழனிக்கு சென்றுள்ளார். மேலும் மலைக்கோவிலுக்கு அடிவாரத்திலிருந்து ரோப்கார் மூலம் சென்றார். அதன்பின் பூஜையில் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தார்.
மேலும் அதனை தொடர்ந்து தங்கரத புறப்பாடுகளிலும் பங்கேற்றார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறும் போது, அதிமுக-பாஜக கூட்டணி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவது உறுதியாகிவிட்டது. ஜனநாயகத்தின் மீது தி.மு.க.விற்கு நம்பிக்கை இல்லை பணத்தை மட்டுமே அவர்கள் நம்பியிருந்தனர். எனவே அடுத்த மாதம் (மே) இரண்டாம் தேதி அதற்கான விடை கிடைக்கும் என்றார்.