Categories
மாநில செய்திகள்

“எடப்பாடி பழனிசாமி வாகனத்தை சூழ்ந்து எதிர்கோஷம்”….. திடீர் பரபரப்பு….!!!!

சென்னையில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். வழிநெடுகிலும் ஆதரவாளர்கள் ஈபிஎஸ் வாகனம் மீது மலர்தூவி வரவேற்றனர். இதற்கிடையே பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்றபோது வாகனங்களை மறித்து ‘ஓபிஎஸ் வாழ்க’ என தொண்டர்கள் முழக்கமிட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே சென்னை, பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லதில் இருந்து பொதுக்குழு நடக்கும் வானகரத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர் செல்வம் பிரச்சார வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

Categories

Tech |