Categories
அரசியல்

“எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிய பெயர் சூட்டிய ஸ்டாலின்…!!” அப்செட் மூடில் EPS…!!!

 

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கட்சி தலைவர்களும் பிரமுகர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு புதிய பெயர் சூட்டி உள்ளதாக கூறினார். எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிற்கு ஒன்று என்றால் ஓடிவந்து நிற்பதாகவும், தமிழகத்தில் பாஜக
விற்கு வாய்ஸ் கொடுப்பதாகவும், தமிழகத்தில் பாஜகவை நிலைநிறுத்த எடப்பாடி பழனிச்சாமி விரும்புவதால் இன்று முதல் அவர் பெயர் பாஜக பழனிசாமி என கூறியுள்ளார்.

பாஜக விவசாயிகளை கொச்சை படுத்தியது. டெல்லி போராட்டத்தின்போது அதோடு ஆயிரம் விவசாயிகளுக்கு மேல் உயிரிழந்தனர். ஒரு வருடமாக விவசாயிகள் பட்டபாடு மற்றும் அவர்களை அவர்களின் துயர் துடைக்க பாஜக எந்த முனைப்பும் காட்டவில்லை. ஆனால் தற்போது வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்திய விவசாயிகளை தரகர்கள் எனக்கூறி கொச்சைப்படுத்தி உள்ளது பாஜக. இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்கத் தயாரா.? என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |