Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தார் ஓ.பன்னீர் செல்வம் …!!!

முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என மகிழ்ச்சியுடன் அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இன்று அறிவிக்கப்படுவர் என ஏற்கனவே கட்சி தலைமையகம் சார்பில் கூறப்பட்டிருந்த  நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தனர்.அதன் பின்னர் சற்றும் முன் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

இதில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முன்னதாக  அதிமுக அரசின் 11 பேர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவினை அறிவித்தார். அதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.அதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சால்வை போர்த்தி பன்னீர்செல்வத்திற்கு மரியாதையை செலுத்தினார்.இதன் மூலம் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை முடிவுக்கு வந்தது.

Categories

Tech |