Categories
மாநில செய்திகள்

“எடப்பாடி பழனிச்சாமி தான் தஞ்சாவூர் பொம்மை மாதிரி இருக்கிறார்”… அமைச்சர் சேகர்பாபு ஸ்பீச்….!!!!!

சென்னை மின்ட் தங்கசாலை அருகில் உள்ள ராயபுரம் மண்டல அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரான கே.என்.நேரு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு போன்றோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் போன்றோரும் உடன் இருந்தனர்.

இதையடுத்து சென்னையில் நீர்வழித்தடங்களின் அருகாமையில் வசிக்கும் 1 லட்சத்து 60 ஆயிரம் நபர்களுக்கு கொசுவலைகளை வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இதனிடையில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு கே.என்.நேரு பதில் அளித்தார். அதாவது, எதிர்க்கட்சிகள் எங்களை குறை கூறுவதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

எங்களுக்கு மக்களை பற்றி கவலைப்படவும், அதற்குரிய வேலையை செய்யவுமே நேரம் சரியாக உள்ளது என்று பதிலளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் தலையாட்டி பொம்மை போல் இருக்கிறார் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனம் குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார். எடப்பாடி பழனிச்சாமி தான் தஞ்சாவூர் பொம்மைபோல் இருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்.

Categories

Tech |