இன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் பேசிய முக.ஸ்டாலின், அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் மூலமாக கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் நாம் ஆட்சியர் மூலமாக நடத்தவில்லை. இப்போது இந்த கூட்டத்திற்கு நான்தான் ஆட்சியர். நாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடத்துகின்றோம். வேண்டுமென்றே இந்த கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென காவல்துறை மற்றும் ஆட்சியர் மூலமாக முயற்சித்தனர்.
அதனால் கிராம சபைக் கூட்டத்திற்கு தடை விதித்தனர். தடையை மீறி நம்மால் நடத்த முடியும். ஆனால் தேவையற்ற பிரச்சினைகள் வேண்டாம் என்றும், நமது கொள்கைப்படி கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதற்காகவும் மக்கள் சபை கூட்டம் என மாற்றி நடத்துகின்றோம். அதற்காக நாம் பயந்து விட்டு மக்கள் சபையாக மாற்றி விட்டோம் என நினைக்க வேண்டாம். இந்த கூட்டத்தை எப்படியாவது நடத்திய ஆக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாற்றம் என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.