Categories
தேசிய செய்திகள்

எடியூரப்பாவை பார்க்கணுமா… அப்போ இது கட்டாயம் செய்யனும்… அரசு அதிரடி உத்தரவு…!!?

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்திக்க வருபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

கர்நாடக மாநிலத்தில் தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்தை எட்டியுள்ளது. மேலும் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரிகள் என அனைவரையும் கொரோனா பாதித்துள்ளது. மேலும் சில எம்எல்ஏக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்திக்க வருகின்ற அதிகாரிகள் உட்பட எவராக இருந்தாலும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக முதல் மந்திரியின் கிருஷ்ணா இல்லத்தில் ஆண்டிஜன் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டு இருக்கின்றது. அந்த ஆய்வகத்தில் பரிசோதனை செய்து கொள்பவர்களின் பரிசோதனை முடிவு ஒரு மணி நேரத்தில் கிடைக்கும். அந்த முடிவில் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதிப் படுத்தப்பட்டவர்கள் மட்டுமே முதல் மந்திரியே சந்திப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |