கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், பாஜகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக அந்த கட்சித் தலைவர்களே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதனால் மத்திய அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டது போல கர்நாடகம் அமைச்சரவையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவது சம்பந்தமாக எடியூரப்பா மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முதல்வரை மாற்றுவது தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக பரவி வரும் தகவல் வதந்தி எனவும், கட்சிக்காக கடுமையாக உழைத்து உழைத்து கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க பாடுபடுவேன் என்றும் கூறியுள்ளார்.