தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதில் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்ற மாவட்டங்களில் மதுரையும் ஒன்று. மதுரையில் மட்டும் சுமார் 1600 க்கும் மேற்பட்ட நபர்கள் பல்வேறு குற்றங்களில் செய்து வருகின்றனர்.இநிலையில் மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்தா சின்ஹா என்பவர் காவல் உயரதிகாரிகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் ஒரு மொபைல் செயலி ஒன்றை வடிவமைக்க உத்தரவிட்டார்.
அந்த செயலில் ரவுடிகள் பற்றி பல்வேறு தகவல்கள் குறித்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ரவுடிகளின் பெயர் வாரியாக, காவல் நிலையம் வாரியாக, கும்பல் வாரியாக அவர்களின் வழக்கு விபரங்கள், அவர்கள் சிறையில் உள்ளார்கள் அல்லது வெளியில் உள்ளார்களா மற்றும் அவர்கள் யாருக்கு எதிராக செயல்படுகிறார்கள் போன்ற அனைத்து தகவல்களையும் நொடியில் தெரிந்து கொள்ளலாம். தற்போது தமிழகத்தில் நடைபெற்ற டிஸ் ஆர்ம் ஆப்ரேஷனை விட மதுரை மாநகரம் காவல்துறை டிஜேபி-யின் செயல்பாடு பாராட்டை பெற்றுள்ளது.
மேலும் இந்த செயலி மூலம் 600 மேற்பட்ட ரவுடிகளை விசாரணை செய்து, 40க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து மற்றும் பல்வேறு ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக பிரேம் ஆனந்த் சின்ஹா கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து மதுரையில் தென் மாவட்ட காவல் உயரதிகாரிகள் மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மொபைல் அப்ளிகேஷன் பயன்பாட்டை பாராட்டினார்.மேலும் இந்த செயலியை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.