Categories
மாநில செய்திகள்

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் சிக்கல்…. ஆசிரியர்கள் விடுக்கும் முக்கிய கோரிக்கை….!!!!

தமிழகத்தில் 1- 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இப்போது இந்த புது திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது ஒவ்வொரு மாணவனுக்கும் உள்ள திறனை ஆராய்ந்து அதற்கு தகுந்தாற்போல ஆசிரியர்கள் மாணவனுக்கு பாடங்களை சொல்லிதர வேண்டும். அப்போது எந்த வகையிலோ மாணவர்கள் அந்த பாடத்திட்டங்களை முழுமையாக புரிந்துகொண்டால் போதும். எனினும் ஆசிரியர்களை இதனை செய்யவிடாமல் கஷ்டமான ஒன்றை புரியவைக்க சொல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

அதன்படி எளிமையாக A B C D சொல்லி கொடுப்பதற்கு பதில் எதற்காக 40-க்கும் குறையாத பதிவேடுகளை உருவாக்க வேண்டும் என்றும் அந்த கையேடுகளை உருவாக்குவதிலேயே மொத்த நேரமும் போய் விடுகிறது என்றும்  ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அத்துடன் கட்டாயமாக பதிவேடுகளை தயார்செய்ய வேண்டும் என்பதால் மட்டுமே பயந்து அந்த வேலைகளை செய்ய வேண்டியதாக இருக்கிறது. ஆகவே ஆசிரியர்களுக்கு கற்பித்தல் சுதந்திரம் வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இவ்வாறு தான் ஆசிரியர்கள் சொல்லித்தர வேண்டும். இதனைத் தான் சொல்லிதர வேண்டும் என கூறினால் எந்திரங்களை வைத்து பாடம் நடத்தலாமே என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே முதலாவதாக ஆசிரியர்களுக்கு கற்றல் சுதந்திரமானது வழங்க வேண்டும். ஒவ்வொரு மாணவனுக்கும் சுதந்திரமாக எங்களது கருத்துக்களை பகிரவேண்டும் என்றும் மகிழ்ச்சியோடு ஆசிரியர்களை பாடம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை மிகுந்த மனஉளைச்சலை உண்டாக்குவதாகவும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Categories

Tech |