கடலெண்ணெய் ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
ஈரோடு அடுத்து இருக்கும் வாய்க்கால்மேடு பகுதியில் வசித்து வருபவர் தனசேகர். இவர் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கடலை எண்ணெய் உற்பத்தி ஆலை நடத்தி வருகின்றார். இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது திடீரென பாய்லரில் இருந்து தீ கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவு பரவியதை தொடர்ந்து எண்ணெய் ஆலை என்பதால் தீ கட்டிடம் முழுவதிலும் பரவத்தொடங்கியது.
இதனையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஈரோடு மற்றும் பெருந்துறையை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக வாகனம் வரவழைக்கப்பட்டு உள்ளது. கேஸ் மூலமாக நெருப்பை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் ஏராளமான இழப்புகள் நேர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
தொடர்ந்து அதிகாரிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தீயணைப்புத்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இந்த நெருப்பு வேகமாக பரவியதால் ஆலையின் மேற்கூரைகள் வெடித்து சிதறியுள்ளது எனவே அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.