இலங்கை கடற் பகுதியில் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ இந்தியா உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசு நன்றி தெரிவித்துள்ளது.
பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் பரவியது.
அந்தக் கோர சம்பவத்தில் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கப்பல் விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை கடற்படை கப்பல்கள், விமானப் படையினர் மற்றும் துறைமுக அதிகாரிகள் அனைவரும் தீயை அணைக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரம் போராடியும் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் இந்தியாவின் உதவியை இலங்கை நாடியது. அதன் பின்னர் இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு உரிமையான மூன்று கப்பல்கள் மற்றும் டோர்னியர் விமானம் ஒன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு வீரர்கள் அனைவரும் இரவு பகலாக தொடர்ந்து போராடினர். இந்த நீண்ட நேர போராட்டத்தின் பலனாக கப்பலில் ஏற்பட்ட தீ வீரர்களால் வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் இழுவை படகு மூலமாக கப்பலால் கடல் பகுதிக்கு நகர்த்தப்பட்டது. இந்தியாவின் கடற்படை மற்றும் கடலோர காவல்படை மற்றும் தங்கள் விமானப்படை, துறைமுக அதிகாரிகள் அனைவரின் உதவியால் கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை நன்றி தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு எதுவும் ஏற்படவில்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.