பிரித்தானியாவில் டிகார்பனைசேஷன் முயற்சிகளை அரசாங்கம் துரிதப்படுத்த வலியுறுத்தி Extinction Rebellion மற்றும் Just Stop Oil என்ற சமூக ஆர்வலர் குழுக்களை சேர்ந்தவர்கள் பிரித்தானியாவின் சில பகுதிகளில் போராட்டம் நடத்தினர். அவர்கள் பிரித்தானியாவில் உள்ள எண்ணெய்க் கிணறுகளின் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்ட 63 க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து உதவி தலைமை காவல் அதிகாரி கூறுகையில், போலீசார் பிரிட்டனில் விதிவிலக்கான மற்றும் சவாலான சூழ்நிலையில் போராடி வருவதாக கூறியுள்ளார்.மேலும் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சந்தேகத்தின் அடிப்படையில் பல்வேறு குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.