Categories
உலக செய்திகள்

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து.. வானுயரத்திற்கு கொழுந்துவிட்டு எறிந்த தீ.. மாரடைப்பால் ஒருவர் பலி..!!

இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் இருக்கும் Balongan என்ற பகுதியில் Pertamina என்ற அரசின் நிறுவனம் நடத்தும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான இந்த நிலையம் திடீரென்று கடும் தீ விபத்திற்குள்ளானது.

அந்த சமயத்தில் தீப்பிழம்பு உருவாகி மிக உயரத்திற்கு சென்றி மளமளவென எரிந்துள்ளது.இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகியுள்ளது. இந்த தீ விபத்து கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் சுமார் 12:45 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இதில் ஐந்து நபர்கள் படுகாயமடைந்ததை தொடர்ந்து உடனடியாக அந்த பகுதியில் வசிக்கும் 1000 நபர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்துக்குள்ளான இடம் முழுவதும் பயங்கரமாக வெடித்து சிதறியதில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதில் 15 நபர்களுக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தீ ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது உறுதியாக தெரியவில்லை.

எனினும் அந்த நிறுவனம் மின்னல் தாக்கத்தால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.  தலைநகர் ஜகார்தாவிற்கு கிழக்கு பகுதியில் சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளது.

Categories

Tech |