பிரபல நடிகை தன்னுடைய காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்தி மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக கியாரா அத்வானி வலம் வருகிறார். இவர் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்குடன் நடித்த எம்.எஸ் தோனி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவர் பாலிவுட்டில் பிரபல நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வருகிறார். இந்நிலையில் கியாரா அத்வானியும், சித்தார்த் மல்கோத்ரா கடந்த சில மாதங்களாக ஒருவருக்கு ஒருவர் பார்க்காமல் பேசாமல் இருந்து வருகின்றனர். இதனால் இருவருக்கும் பிரேக்கப் ஆகி விட்டதாக தகவல்கள் தீயாக பரவியது.
இதனால் தன்னுடைய காதல் பிரேக் அப் குறித்த வதந்திகளுக்கு தற்போது கியாரா அத்வானி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது அற்பத்தனமான வதந்திகளை பரப்புவது யார் என்றும், மிர்ச்சி மசாலாவை கிளப்பி விடுவது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஏனெனில் கண்மூடித்தனமாக வதந்திகளை நம்புபவர் தான் இந்த மாதிரியான பொய்யான தகவல்களை பரப்ப முடியும் என்றார். இதன் மூலமாக சித்தார்த் மல்கோத்ராவும், கியாரா அத்வானியும் ஒற்றுமையாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கியாரா அத்வானி வதந்திகளில் இருந்து நான் இன்னும் மீளவில்லை என்று கூறியுள்ளார்.