இல்லம் தேடி கல்வி திட்டத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக பொது முடக்கங்கள் ஏற்படப் பட்டதால் 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதன் காரணமாக மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதன் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்காக கல்வி என்ற தொலைக்காட்சியை தொடங்கி அரசாங்கம் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்கப்படுத்தியது. இதேபோன்று இல்லம் தேடி கல்வி என்ற அமைப்பையும் தமிழகம் முழுவதும் அரசு தொடங்கி கிராமப்புற மக்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்து வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த இல்லம் தேடி கல்வி அமைப்பில் வேலைப் பார்க்கும் தன்னார்வலர்களுக்கு மாதம் ஊக்கத் தொகையாக ரூபாய் 1000 வழங்கப்படும்.
இந்த இல்லம் தேடி கல்வி அமைப்புகள் பெற்றோர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றதால் பள்ளிகள் தொடங்கப்பட்ட பிறகும் 6 மாதங்களுக்கு இல்லம் தேடி கல்வி அமைப்பு நீடிக்கப்பட்டது. இந்நிலையில் இல்லம் தேடி கல்வி அமைப்பில் வேலைப்பார்க்கும் தன்னார்வலர்களுக்கு தற்போது ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்த ஊக்கத்தொகை கடந்த மே மாதத்தில் இருந்து வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே தன்னார்வலர்களுக்கு ஊக்க தொகையை வழங்குவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.