பல படங்களில் நாம் மனிதர்களை தூக்கில் போடுவதை பார்த்திருப்போம். அப்படி தூக்கில் போடும்போது அவர்களின் முகத்தை கருப்பு துணியால் மூடுவார்கள். படத்தில் இப்படி செய்கிறார்கள் சரி, ஆனால் நிஜமாக ஒருவரை தூக்கில் போடும் போது கருப்பு துணியால் முகத்தை மூடுவார்கள் என்று கேட்டால் அதிகாரிகள் ஆம் என்றுதான் கூறுகிறார்கள். ஆனால் எதற்காக இப்படி கருப்புத் துணியால் அவர்களின் முகத்தை மூடுகிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? அவர்கள் நிறைய குற்றங்கள் செய்திருந்தாலும் அவர்களும் ஒரு மனிதர்கள். அதனால்தான் ஒரு கருப்புத் துணியால் அவர்களின் முகத்தை மூடுகிறார்கள்.
அதாவது ஒருவர் கஷ்டப்படுவதை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக முகத்தை கருப்புத் துணியால் மூடுகிறார்கள். இறப்பு என்பது மிகவும் கொடுமையான ஒரு விஷயம். அதை பார்க்கும் மற்ற நபர்களை மிகவும் பாதிக்கும். ஒரு நபரை தூக்கிலிடும் பொழுது அங்கு உள்ள அதிகாரிகளையும் இது பாதிக்கும் என்பதால் சம்பந்தப்பட்ட நபர்களின் முகத்தை கருப்பு துணியால் மூடுகிறார்கள். அவர்களை கயிறு கொண்டு தூக்கிலிடும் பொழுது கழுத்தின் இடைநிறுத்தப்பட்டு உடலின் எடை, மூச்சுக்குழாய் மற்றும் கழுத்தை சுற்றியுள்ள பகுதிகளை கயிறு இருக்கும். இதனால் அவர்களின் முகம் மிகவும் கொடூரமாக இருக்கும். இதை யாரும் பார்க்க கூடாது. அப்படி பார்த்தால் அவர்களுக்கு மனதளவில் மிகுந்த கஷ்டத்தை கொடுக்கும் என்பதற்காகத்தான் இப்படி கருப்புத் துணியால் முகத்தை மூடி விட்டு பின்னர் தூக்கில் இடுகிறார்கள்.