அகில இந்திய நேதாஜி கட்சியினர் கோவை போலீஸ் கமிஷனரிடம் மார்ச் 10ஆம் தேதி சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம் பெற்றுள்ள முருகன் பாடலை நீக்கக் கோரி புகார் அளித்துள்ளார்கள்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மார்ச் 10ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் படம் கடந்த 3 ஆண்டுக்கு பிறகு திரையில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இடம் பிடித்துள்ள இமான் இசை அமைத்திருக்கும் முருகன் பாடல் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்நிலையில் அகில இந்திய நேதாஜி கட்சியினர் எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்றுள்ள அந்தப் பாடல் தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்துவதாக இருப்பதாகவும், அதனை படத்திலிருந்து நீக்க வேண்டும் எனவும் கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்கள்.
அதுமட்டுமின்றி அந்தப் பாடலில் நடித்துள்ள சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ், இமான் மற்றும் பாடலை இயற்றிய யுகபாரதி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள்.